இந்திய எல்லைப் பகுதிகளை உள்ளடக்கிய புதிய வரைபட மசோதா நேபாள நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

காட்மாண்டு
இந்தியாவின் எல்லைப் பகுதிகளான லிபுலேக், லிம்பியாதுரா, கலாபானி ஆகிய பகுதிகளை நேபாள அரசு தனது எல்லைப்பகுதியாகச் சித்தரித்து தனது புதிய நிலவரைபடத்தில் குறிப்பிட்டுள்ளது.
நேபாளத்தின் இந்தச் செயலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் புதிய வரைபடத்தை நேபாள நாடாளுமன்றத்தில் பிரதமர் கே பி ஷர்மா ஒலி தாக்கல் செய்கிறார். பெரும்பான்மை ஆதரவு இருப்பதால் இந்த மசோதா நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் ஆளும் கட்சியின் இந்த முடிவுக்கு அந்நாட்டு பிரதான எதிர்க்கட்சியான நேபாள காங்கிரஸ் ஏற்கனவே முழு ஆதரவு தெரிவித்துள்ளது.