காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி மேற்கொள்வதற்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து விடுவதற்காக வரும் 12ந்தேதி முதல் அமைச்சர் பழனிசாமி நேரில் செல்கிறார்.

சென்னை,
தென்மேற்கு பருவமழை பொழிய தொடங்கிய நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் நிறைந்து வருகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி செய்வதற்கான தொடக்க பணிகள் நடந்து வருகின்றன.
இதனை முன்னிட்டு சாகுபடிக்கான நீர்ப்பாசன வசதிக்காக வரும் 12ந்தேதி காலை 10 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதற்காக தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணையை திறந்துவிட நேரில் செல்கிறார். மேட்டூர் அணையில் 100 அடிக்கு மேல் நீர் இருப்பு உள்ள நிலையில் தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.