சென்னை தியாகராய நகரில் ஒன்றாக அமர்ந்து சீட்டு விளையாடிய 13 பேருக்கு இன்று ஒரே நாளில் தொற்று உறுதியாகியுள்ளது.

சென்னை
சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,937 ஆக உயர்ந்துள்ளது. இதில் 12,591 பேர் குணம் அடைந்துள்ளனர். 13,085 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 260 ஆக உயர்ந்துள்ளது.ஒரு வாரத்திற்கும் மேலாக தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்படுகிறது.நேற்று அதிகபட்சமாக 1477 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பலருக்கும் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இதனால், வெளியூர்களிலும் தொற்று பரவல் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது.
கொரோனா தொற்று அதிகம் உள்ள சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பான திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருவதாக சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக தகவல் பரவின.
இந்நிலையில், தியாகராய நகர் தர்ம்புரம் பகுதியில் ஒன்றாக அமர்ந்து சீட்டு விளையாடிய 13 பேருக்கு இன்று ஒரே நாளில் தொற்று உறுதியாகியுள்ளது. இந்தப்பகுதியில் ஏற்கனவே 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.