இந்தியா-சீனா எல்லைப் பகுதிகளின் நிலைமை குறித்து விவாதிக்க ஜூன் 19 ஆம் தேதி மாலை 5 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
புதுடெல்லி
ஆசிய கண்டத்தின் வல்லரசுகளான இந்தியாவும் சீனாவும் தங்கள் நீண்ட எல்லையில் அடிக்கடி மோதலின் நீண்ட வரலாற்றைப் பகிர்ந்து கொள்கின்றன. மேலும் இரு ராணுவ வீரர்களுக்கு இடையிலான ஒரு பயங்கர மோதலில் கடந்த சில நாட்களாக பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
லடாக் பகுதியில் நேற்று சீன ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்களின் பதிலடியில் சீனதரப்பில் 43 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் லடாக் விவகாரம் தொடர்பாக பிரதமர் அமைதி காப்பது ஏன். ஓடி ஒளிவது ஏன் என ராகுல்காந்தி கேள்வி எழுப்பி இருந்தார்.
இதை தொடர்ந்து இந்தியா-சீனா எல்லைப் பகுதிகளின் நிலைமை குறித்து விவாதிக்க ஜூன் 19 ஆம் தேதி மாலை 5 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.