போர் பயிற்சியில் ஈடுபட்டு ஆயுத பலத்தை காட்டும் சீனா; ரோபோக்களை வைத்தும் சோதனை

Spread the love

இந்தியாவுடனான மோதலுக்கு பிறகு போர் பயிற்சியில் ஈடுபட்டு ஆயுத பலத்தை காட்டும் சீனா; ரோபோக்களை வைத்தும் சோதனை நடத்துகிறது.


புதுடெல்லி

இந்திய- சீனா எல்லையில் கல்வான் பகுதியில் ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் கர்னல் உட்பட 20 வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியான நிலையில்,தற்போது சீனாவும் தங்கள் தரப்பில் 43 பேர் பலியானதாக தெரிவித்துள்ளனர். ஆனால் இது திங்களன்று நடந்த மோதலில் கொல்லப்பட்டவர்களா என்ற தகவலை சீனா ராணுவம் உறுதி செய்ய மறுத்துள்ளது.

இந்த மோதலில் இரு தரப்பினரும் துப்பாக்கிகளைப் பயன்படுத்தவில்லை, ஏனெனில் சமாதான உடன்படிக்கையின் கீழ் இரு தரப்பினரும் சர்ச்சைக்குரிய எல்லையிலிருந்து 2 கி.மீ தூரத்திற்குள் துப்பாக்கிகளை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று ஒப்புக் கொண்டுள்ளனர்.

இதனால் கொல்லப்பட்ட ராணுவத்தினர் மிக மோசமாக தாக்கப்பட்டுள்ளதும், பலர் கால்வன் ஆற்றில் தவறி விழுந்ததாகவும் கூறப்படுகிறது.கால்வன் ஆற்றில் விழுந்தவர்கள் உயிர் தப்புவது கடினம் என்பதால், பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.இதனிடையே டெல்லியில் அதிகாரிகள் தரப்பு இந்த மோதலுக்கு பழிவாங்க வேண்டும் என்று கோரியதால், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ‘வீரர்களின் தியாகம் வீணாகாது என்று எச்சரித்துள்ளார்.

மேலும், இந்தியா சமாதானத்தையே விரும்புகிறது, ஆனால் மோதல் போக்கு நீடித்தால் அது நிலைமை எதுவாக இருந்தாலும் பொருத்தமான பதிலை அளிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் சீனா நாட்டின் சக்தி வாய்ந்த ஆயுதங்களை போர் பயிற்சிக்கு உட்படுத்தியுள்ள வீடியோ காட்சிகளை சீனா வெளியிட்டுள்ளது.

அண்மையில் இந்தியாவுடனான கொடிய எல்லை மோதலில் ஈடு பட்ட சீனா மோதல் நடந்த அதே இடத்தில் ஒரு பெரிய இராணுவப் பயிற்சி நடத்தி வருகிறது. இந்த வீடியோவை சீன அரசு தொலைக்காட்சி வெளியிட்டு உள்ளது. அதில் சுமார் 7,000 சீன ராணுவத்தினர் போர் பயிற்சியில் கலந்து கொள்வதும், ஆயுத பலத்தை காட்டுவதாகவும் அமைந்துள்ளது.

தீவிரவாதத் தாக்குதல் மற்றும் போர்களில் ஏற்படும் ராணுவத்தினரின் உயிரிழப்பைத் தடுக்க போர்முனை ரோபோவை சீனா மீண்டும் சோதனை செய்துள்ளது. மணிக்கு 10 கிலோ மீட்டர் வரை வேகமாகச் செல்லும் இந்த ரோபோ முழுவதும் ரிமோட் மூலம் இயக்கப்படுகிறது.

இரவிலும் தெளிவாகப் பார்க்ககூடிய நவீன வசதிகளும், இயந்திரத் துப்பாக்கியும் இந்த ரோபோவில் பொருத்தப்பட்டுள்ளன.

செங்குத்தாக ஏறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இதில், கேமராவும் அடக்கம். ரோபா வாரியர் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபாபோ மூலம் எந்த காலச்சூழ்நிலையிலும், எந்த இடத்திலும் சண்டையிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page