இந்தியாவில் கொரோனா தீவிரம் பற்றிய கணிப்புகள் தோல்வி கண்டுள்ளதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) இந்திய மருத்துவ ஆராய்ச்சி பத்திரிகை (ஐஜேஎம்ஆர்) தலையங்கத்தில், இந்தியாவில் கொரோனா வைரசின் தீவிரத்தன்மை பற்றிய கணித மாதிரிகளின் கணிப்புகள் தோல்வி கண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த தலையங்கத்தை உலக சுகாதார நிறுவனத்தின் தென் கிழக்கு ஆசிய பகுதிக்கான தொற்று நோய்கள் பிரிவின் முன்னாள் இயக்குனர் ராஜேஷ் பாட்டியாவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய வைராலஜி நிறுவனத்தின் இயக்குனர் பிரியா ஆபிரகாமும் கூட்டாக எழுதி உள்ளனர்.
இதையொட்டி, உலக சுகாதார நிறுவனத்தின் தென் கிழக்கு ஆசிய பகுதிக்கான தொற்று நோய்கள் பிரிவின் முன்னாள் இயக்குனர் ராஜேஷ் பாட்டியா கூறும்போது, “ மேற்கத்திய நாடுகளில் சில நிறுவனங்கள் உருவாக்கிய பல கணித மாதிரிகள், இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் மற்றும் மரணங்கள் பற்றிய அதிகளவிலான எண்ணிக்கை, துல்லியம் இல்லாதவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளன” என கூறினார்