கொரோனா தடுப்புப் பணிகள் தொடர்பாக 33 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு வணிகவரிகள் மற்றும் பதிவுத் துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை,
இதுகுறித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அரியலூர் மாவட்டம்-புவியியல் மற்றும் சுரங்கங்கள் இயக்குனர் இ.சரவணவேல்ராஜ், பெரம்பலூர் மாவட்டம்- மாநில திட்டக்குழு உறுப்பினர் செயலாளர் அனில் மேஷ்ராம், கோவை மாவட்டம்- நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், நீலகிரி மாவட்டம்-‘இன்ட்கோசெர்வ்’ நிர்வாக இயக்குனர் சுப்ரியா சாகு, கடலூர் மாவட்டம்- வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மைத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தர்மபுரி மாவட்டம்- தமிழ்நாடு கைவினை மேம்பாட்டுக் கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சந்தோஷ்பாபு, திண்டுக்கல்-ஆவணக் காப்பக ஆணையர் மங்கத்ராம் சர்மா.
ஈரோடு-தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் காகர்லா உஷா, கன்னியாகுமரி- பதிவுத்துறைத் தலைவர் பி.ஜோதி நிர்மலாசாமி, கரூர்- மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் சி.விஜயராஜ் குமார், திருச்சி- சர்க்கரை ஆணையர் ரீட்டா ஹரிஷ் தாக்கர், கிருஷ்ணகிரி- வணிகவரிகள் மற்றும் பதிவுத் துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், மதுரை-போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ்,
புதுக்கோட்டை- கைத்தறி, கைவினைகள், ஜவுளி மற்றும் காதித்துறை முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர், தஞ்சாவூர்- சென்னை மெட்ரோ ரெயில் மேலாண்மை இயக்குனர் பிரதீப் யாதவ், நாமக்கல்- கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கடாரியா, சேலம்- தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுத்தின்.
அபூர்வா
விருதுநகர்- சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை எஸ்.மதுமதி, தூத்துக்குடி- வெளிநாட்டு மனிதவள கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் குமார் ஜெயந்த், நாகை- ஆதிதிராவிடர் நலன் ஆணையர் சி.முனியநாதன், ராமநாதபுரம்- பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் பி.சந்திரமோகன், சிவகங்கை- தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், திருவாரூர்- பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் கே.மணிவாசன், தேனி- நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் ஏ.கார்த்திக், திருவண்ணாமலை- பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார், நெல்லை- உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா.
ராஜேஷ் லக்கானி
திருப்பூர் -கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை முதன்மைச் செயலாளர் கே.கோபால், வேலூர்- வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் ராஜேஷ் லக்கானி, விழுப்புரம்-தொழில்துறை முதன்மை செயலாளர் என்.முருகானந்தம், கள்ளக்குறிச்சி- தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவன இயக்குனர் எஸ்.நாகராஜன், தென்காசி- தொழில் ஆணையர், தொழில் மற்றும் வர்த்தக இயக்குநர் அனு ஜார்ஜ், திருப்பத்தூர்-போக்குவரத்து ஆணையர் டி.எஸ்.ஜவஹர், ராணிப்பேட்டை மாவட்டம்- வணிக வரிகள் கூடுதல் ஆணையர் ஜி.லட்சுமி பிரியா ஆகியோர் கொரோனா தடுப்புப் பணிகளின் கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
உதயச்சந்திரன்
அதுபோல, கொரோனா தடுப்பு தொடர்பான செங்கல்பட்டு மாவட்ட களப்பணிக் குழுவில் தொல்லியல் ஆணையர் டி.உதயச்சந்திரன்; திருவள்ளூர் களப்பணிக் குழுவில் நகராட்சி நிர்வாக ஆணையர் கே.பாஸ்கரன், காஞ்சீபுரம் களப்பணிக் குழுவில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளர் எல்.சுப்பிரமணியன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.