கொரோனா பரிசோதனையில் பாதிப்பு விகிதம் அதிகரித்து வருவது இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது என்பதை காட்டுகிறது என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

புதுடெல்லி
நாடு முழுவதும் கொரோனா பரிசோதனையில் கொரோனா பாதிப்பு சராசரி வீதம் மே 17 ஆம் தேதியில் இருந்து ஜூன் 17 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 4.6 சதவீதத்திலிருந்து 7.8 சதவீதமாக உயர்ந்துள்ளது, ஆனால் இந்த உயர்வு டெல்லி மற்றும் அரியானா போன்ற மாநிலங்களில் ஆபத்தை உணர்த்துகிறது.
டெல்லியில், பரிசோதனையில் நேர்மறை விகிதம் மே 17 அன்று 7 சதவீதத்தில் இருந்து ஜூன் 17 அன்று 31.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு 100 பரிசோதனைகளுக்கும் ஏழு நபர் கொரோனாவால் பாதிக்கபட்டது கண்டறியப்பட்டது. இது இப்போது 100 இல் 31 ஆக உயர்ந்துள்ளது.
ஜூன் 18 ஆம் தேதி நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவுக்கு 6426627 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன, நேற்று ஒரே நாளில் 1,76,959 மாதிரிகள் பரிசோதிக்கபட்டு உள்ளது. மொத்த பரிசோத்னைகளில் 3.70 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இதன் விளைவாக ஜனவரி மாதத்தில் சோதனை தொடங்கியதிலிருந்து ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 5.9 சதவீதம் ஆகும்.
கொரோனா பாதிப்பு விகிதத்தின் அதிகரிப்பு சமூகத்தில் வைரஸ் பரவுகிறது என்பதை காட்டுகிறது என்று நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
“பரிசோதனையில் நேர்மறை விகிதத்தம் அதிகரிப்பு என்பது சமூகத்தில் வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதன் பிரதிபலிப்பாகும்”என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் வைராலஜி மேம்பட்ட ஆராய்ச்சி மைய முன்னாள் தலைவர் டி. ஜேக்கப் ஜான் கூறினார்,
மோசமான பாதிப்புக்குள்ளான 10 மாநிலங்களில், டெல்லி நேர்மறை விகிதத்தில் மிகப்பெரிய மாற்றத்தை காட்டுகிறது. (மே 17 அன்று 7 சதவீதம் முதல் ஜூன் 17 வரை 31 சதவீதம் வரை), அரியானா (1 சதவீதம் முதல் 10.1 சத்வீதம் வரை) மற்றும் தமிழகம் (4.2 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை)
நேர்மறை விகிதம் மராட்டியத்தில் மே 17 அன்று 16.4 சதவீதத்திலிருந்து ஜூன் 17 அன்று 21.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.
எவ்வாறாயினும், மோசமான பாதிப்புக்குள்ளான 10 மாநிலங்களில் குஜராத், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் மட்டுமே குறைவான நேர்மறை விகிதத்தை அறிவித்தன – ஓரளவு என்றாலும். குஜராத்தில் இது 11.3 சதவீதத்திலிருந்து 10.1 சதவீதமாகவும், ராஜஸ்தானில் 2.2 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகவும், மத்திய பிரதேசத்தில் 4.3 சதவீதத்திலிருந்து 2.8 சதவீதமாகவும் உள்ளது