சென்னையில் காட்டுத் தீ போல் பரவும் கொரோனா ஒரேநாளில் 40 பேர் உயிரிழப்பு

Spread the love

சென்னையில் காட்டுத் தீ போல் பரவிவரும் கொரோனா ஒரேநாளில் 40 பேர் உயிரிழந்து உள்ளனர் எனசென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை

சென்னையில் ஒரே நாளில் 40 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 501 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் இதுவரை 19,600 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் 3 முதியவர்கள் உள்பட 5 பேர் உயிரிழந்து உள்ளனர். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 7 பேரும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 3 பேரும், ஸ்டான்லி மருத்துவமனையில் 4 பேரும் பலியாகி உள்ளனர்.ஆயிரம்விளக்கு தனியார் மருத்துவமனையில் ஒரு பெண் உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர்.

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்கள் வருமாறு

அதிகபட்சமாக ராயபுரத்தில் 5,828 பேருக்கு நோய் தொற்று

தண்டையார்பேட்டை 4,743
தேனாம்பேட்டை 4,504
கோடம்பாக்கம் 3,959
அண்ணா நகர் 3,820
திருவிக நகர் 3,244
அடையாறு 2,144

சென்னையில் காட்டுத் தீ போல் பரவிவரும் கொரோனா வைரஸ் ஏறத்தாழ 729 தெருக்களில் பரவியுள்ளது. நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பரவி வேகமெடுக்கும் நிலையில், மொத்தம் உள்ள 15 மண்டலங்களில், ராயபுரம் மண்டலத்தில் உள்ள ஆயிரத்து 744 தெருக்களில், 904-ல் கொரோனா தொற்று உள்ளது. அதில், 146 தெருக்களில் தலா 5 பேருக்கும், மொத்த பாதிப்பு 5 ஆயிரத்தை கடந்துள்ளது. தண்டையார்பேட்டை மண்டலத்தில், 4 ஆயிரத்து 500-ஐ கடந்துள்ள கொரோனா தொற்று, 973 தெருக்களில் பரவியுள்ளது.

தேனாம்பேட்டை பகுதியில் 941 தெருக்களில் 4 ஆயிரத்துக்கு 300 பேருக்கு கொரோனா உள்ளது.கோடம்பாக்கம் மண்டலத்தில் மூவாயிரத்து 800 பேருக்கு கொரோனா உள்ளது. மொத்தம் 847 தெருக்களில் கொரோனா உள்ளது. அண்ணா நகரில், 994 தெருக்களில் 3 ஆயிரத்து 600 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

திரு. வி.க. நகர் மண்டலத்தில், 693 தெருக்களில் மூவாயிரத்து 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. அதில், 71 தெருக்களில் 5க்கும் மேற்பட்ட நோய்த் தொற்று உள்ளது. மொத்தம் உள்ள15 மண்டலங்களில் இருக்கும் 39 ஆயிரம் தெருக்களில் 31 ஆயிரம் தெருக்களில் கொரோனா இல்லை.729 தெருக்களில் 5-க்கும் மேற்பட்டோரை தாக்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page