கல்வான் பள்ளதாக்கு பகுதியில் இடம்பெற்ற மோதல்களை தொடர்ந்து சீனா தாம் பிடித்து வைத்திருந்த 4 அதிகாரிகள் உள்பட 10 இந்திய படையினரை விடுவித்துள்ளது.

புதுடெல்லி:
இந்திய-சீன வீரர்கள் இடையே லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15 அன்று மிகப்பெரிய மோதல் நடந்து உள்ளது. நமது தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.76 வீரர்கல் காயமடைந்தனர். சீன தரப்பில் 43 பேர் வரை இறந்திருக்க கூடும் என்று சொல்லப்படுகிறது.
தற்போது லடாக் பகுதியில் இடம்பெற்ற மோதல்களை தொடர்ந்து சீனா தாம் பிடித்து வைத்திருந்த 10 இந்திய படையினரை விடுவித்துள்ளது. இதில் ஒரு லெப்டினன்ட் கேர்னலும், மூன்று மேஜர் தர அதிகாரிகளும் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எனினும் இதனை இந்திய அரசாங்கம் உறுதிசெய்யவில்லை. அத்துடன் சீனாவுடனான மோதலின்போது தமது படையினர் காணாமல் போனதாக இந்தியா அறிவிக்கவுமில்லை.
இந்தநிலையில் பிடிக்கப்பட்ட இந்திய படையினர் விடுக்கப்பட்டது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கான முக்கிய உந்துதலாக இருக்கும் என கூறப்படுகிறது.