பூரி ஜெகன்நாதர் ஆலய ரத யாத்திரை மக்கள் கூட்டம் இல்லாமல் நடத்த அனுமதிக்க கோரில் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் வேண்டுகோள் விடுத்துள்ளது.
புதுடெல்லி
ஒடிசா மாநிலத்தில் உள்ள புரி ஜெகன்நாதர் ஆலயத்தின் ரத யாத்திரை வரும் ஜூன் 23-ந் தேதி நடைபெற இருந்தது. கொரோனா பரவல் காரணமாக, இந்த யாத்திரையை தள்ளி வைக்க வேண்டும் என ஒடிசா விகாஸ் பரிஷத் என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டத
லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் இந்த யாத்திரை விழாவை தற்போது நடத்தினால் ஏராளமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என அந்த தொண்டு நிறுவனம் அளித்த மனுவில் கூறப்பட்டிருந்தது. கடந்த 18-ந் தேதி இந்த வழக்கை விசாரித்த சுப்ரீன் கோர்ட்டின் ஜெகன்நாதர் ஆலய ரத யாத்திரைக்கு தடை விதித்தது உத்தரவிட்டது.
“இந்த யாத்திரையை நடத்த அனுமதித்தால் ஜெகன்நாதர் நம்மை மன்னிக்கமாட்டார். தற்போதைய கொரோனா சூழலில் ஏராளமான மக்கள் கூடுவதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. மக்களின் நலன் கருதி இந்த ரத யாத்திரைக்கு தடை விதிக்கப்படுகிறது” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் நீதிபதிகளின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பூரி ஜெகன்நாதர் ஆலயத்தின் சங்கராச்சாரியர் சுவாமி நிஸ்சாலந்த சரஸ்வதி, ஆலயத்தின் ரத யாத்திரையை நடத்துவதற்கான பாதுகாப்பு திட்டங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து இந்த வழக்கு இன்று நீதிபதி ரவீந்திர பட் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இந்த நிலையில் பூரி ரத யாத்திரைக்கு பொதுமக்கள் பங்களிப்பு இல்லாமல் அனுமதி அளிக்குமாறு மத்திய அரசு வாதிட்டது.
கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் பங்களிப்பு இல்லாமல் இந்த ஆண்டு பூரி பகவான் ஜெகன்நாத் ரத யாத்திரை நடத்த அனுமதிக்கலாம். பல நூற்றாண்டுகளின் பாரம்பரியம் நிறுத்தப்படக்கூடாது. இது கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கைக்குரிய விஷயம். பகவான் ஜெகன்நாதர் நாளை வெளியே வராவிட்டால், அவர் பாரம்பரியங்களின்படி 12 ஆண்டுகள் வெளியே வர முடியாது என்று மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கோர்ட்டில் வாதாடினார்.