சாத்தான்குளத்தில் போலீஸ் கொலைவெறி தாக்குதல் தந்தை மகன் உயிரிழப்பு ! சிபிஐ விசாரணை வேண்டும் வணிகர்கள் கடையடைப்பு …
சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையம் அருகில், மொபைல் கடை மூலம் தொழில் செய்யும் வளரும் இளைஞர்.பென்னிக்ஸ் கடந்த 20ந்தேதி ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தது தொடர்பாக போலீசார் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் மீது வழக்கு பதிவு செய்து, காவல்நிலையத்துக்கு கொண்டுசென்று கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்
கொடூர குற்றவாளிகளை விசாரிப்பது போல் மலத்துவாரத்தில் கம்பை கொண்டு தாக்கியுள்ளனர் , இந்த கொடூர தாக்குதலினால் இருவருக்கும் பெரும் இரத்த போக்கு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்கள் அவர்களுக்கு முதல் உதவிமட்டும் செய்து இருவரையும் கோவில்பட்டி சிறையில் அடைத்துள்ளனர் போலீசாரின் இந்த கொடூர தாக்குதலினாலும் உரிய மருத்துவ வசதி கிடைக்காததினால் பென்னிக்ஸ் நேற்று உயிரிழந்துள்ளார் பென்னிக்ஸ் அவர்களின் தந்தை ஜெயராஜ் இன்று உயிரிழந்துள்ளார் இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்ட வணிகர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்பட்டடுள்ளது
கொலை பசியுடன் அலையும் சாத்தான்குளம் காவல் அதிகாரிகள் அனைவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து அனைவரும் கூண்டோடு சிறையில் அடைக்க வேண்டும் சாத்தான்குளத்தில் போலீஸ் அதிகாரிகள் மீது சிபிஐ விசாரணை வேண்டும் என சாத்தான்குளம் வியாபாரிகள் அனைவரும் கடை அடைப்பு செய்து உள்ளனர் அவர்களுக்கு ஆதரவாக மாவட்டத்தில் பலபகுதிகளில் வணிகர்கள் கடையடைப்பு செய்து வருகிறார்கள் .