இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
இந்திய அளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4.5 லட்சத்தை கடந்துள்ளது. இந்நிலையில் அனைத்து மாநிலங்களிலும் பரிசோதனயை அதிகரிக்குமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது.
சராசரியாக இந்தியா முழுவதும் ஒருநாளைக்கு 1,50,000 பரிசோதனைகள் செய்யப்பட்டு வந்தது. தலைநகர் டெல்லியில் ஒருநாளைக்கு 5,000 பரிசோதனைகள் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டு, ஒருநாளைக்கு 18,000 முதல் 20,000 பரிசோதனைகள் வரை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி நேற்று 2,15,195 பரிசோதனைகள் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தியா முழுவதும் 73,52,911 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.