துருக்கியில் பிரான்ஸ் நாட்டுக்கு உளவு பார்த்ததாக 4 பேரை அந்நாட்டு பொலீசார் கைது செய்துள்ளனர்.

அங்காரா,
துருக்கியில் பிரான்ஸ் நாட்டுக்கு உளவு பார்த்ததாக 4 பேரை அந்நாட்டு பொலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் 4 பேரும் போலி அடையாள அட்டைகளை தயார் செய்து துருக்கி தேசிய புலனாய்வு அமைப்பின் முகவர்கள் போல நடித்து நாட்டின் பழமைவாதக் அமைப்புகள் மற்றும் மத குழுக்கள் பற்றிய தரவுகளை சேகரித்து வந்ததாக தெரிகிறது. மேலும் இவர்கள் துருக்கியில் மத நல இயக்குனரகம் மற்றும் அதன் ஊழியர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடியாதாகவும் தெரிகிறது.
இந்த 4 பேரின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்து வந்த போலீசார் இவர்கள் பிரான்ஸ் நாட்டுக்கு உளவு வேலை பார்த்து வந்ததை கண்டு பிடித்தனர்.இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரின் பெயர் விவரங்கள், அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பன உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்படவில்லை.