இந்தியா உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்த முயற்சிப்பதாக குற்றச்சாட்டு-அமெரிக்காவில் சீனாவுக்கு எதிராக போராட்டம்

Spread the love

அமெரிக்காவில் உள்ள சீன தூதரகம் முன்பாக பதாகைகளை ஏந்தியபடி திரண்ட போராட்டக்காரர்கள் சீனாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.


வாஷிங்டன்,

அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள சீன தூதரகம் முன்பு இன்று சீனாவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பை பறிப்பதோடு, வியட்நாம், தைவான், சிங்கப்பூர் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்துவதாகவும் தங்கள் பலத்தை காட்டி அனைத்து நாடுகளையும் மிரட்டுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சீனா மீது குற்றம் சாட்டினர்.

ஏற்கனவே, கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக உலக நாடுகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றன. இந்த சூழலில், தென் சீனக்கடல் விவகாரம், இந்தியாவுடனான லடாக் எல்லை பிரச்சினை உள்ளிட்டவைகள் சீனாவுக்கு மேலும் அழுத்தத்தை கொடுத்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page