கொரோனா பாதிப்பு; உயிர் காக்கும் விலை உயர்ந்த ஊசி, மருந்துகளை கொள்முதல் செய்ய முதல் அமைச்சர் உத்தரவு

Spread the love

கொரோனா பாதிப்பு சிகிச்சைக்காக உயிர் காக்கும் விலை உயர்ந்த ஊசி, மருந்துகளை கொள்முதல் செய்வதற்கு முதல் அமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.


சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 3,645 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. இதனால் தொடர்ந்து 2வது நாளாக பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்திற்கு கூடுதலாக சென்றது.

இதனால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரை காப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமுடன் எடுத்து வருகிறது. இந்நிலையில், தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும்பொழுது, கொரோனா பாதிப்பு சிகிச்சைக்காக, உயிர் காக்கும் விலை உயர்ந்த ஊசி, மருந்துகளை கொள்முதல் செய்யும்படி முதல் அமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

இதன்படி, ரெம்டெசிவிர் உள்ளிட்ட விலை உயர்ந்த மருந்துகள் கொள்முதல் செய்யப்படும். அவற்றை, மருத்துவ பணிகள் சேவை கழகம் மூலம் உடனடியாக கொள்முதல் செய்யும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதுவரை பாதி மருந்துகள் வந்த நிலையில் மீதி மருந்துகள் ஓரிரு நாட்களில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page