சீன அதிகாரிகளுக்கான விசா கட்டுப்பாடுகளை திரும்பப் பெற வேண்டும்-அமெரிக்காவுக்கு சீனா வலியுறுத்தல்

Spread the love

சீன அதிகாரிகளுக்கான விசா கட்டுப்பாடுகளை திரும்பப் பெற வேண்டும் என்று அமெரிக்காவை சீனா கேட்டுக்கொண்டுள்ளது.


நியூயார்க்,

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் சீனாவுக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டம் நடந்து வருகிறது. சீனாவுக்கு எதிரான இந்த போராட்டங்களைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக ஹாங்காங் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா கொண்டுவர உள்ளது.

புதிய சட்டத்தில், பிரிவினைவாதம் மற்றும் தேசவிரோதச் செயல்களைத் தடுப்பதற்கான கூடுதல் சட்ட அதிகாரங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஹாங்காங் எதிரான சீனாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது இந்த நிலையில் இந்த விவகாரத்தில் சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் சிலர் அமெரிக்கா வருவதற்கு விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ இதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டார். இந்த நிலையில் தங்கள் நாட்டு அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்ட விசா கட்டுப்பாடுகளை நீக்குமாறு அமெரிக்காவை சீனா வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “அமெரிக்க தரப்பு தனது தவறுகளை உடனடியாக சரிசெய்யவும், முடிவுகளை திரும்பப் பெறவும், சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்தவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். சீனா தனது தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை பாதுகாக்க சீனத் தரப்பு தொடர்ந்து வலுவான நடவடிக்கைகளை எடுக்கும்“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page