சாத்தான் வேட்டைக்காடாக மாற்றியவர்களை கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
சாத்தான்குளத்தில் கொலை செய்யப்பட்ட 2 பேருடைய பிரேத பரிசோதனை அறிக்கை வராத நிலையில் பென்னிக்ஸ் மூச்சுத்திணறலில் இறந்தார் என்றும், அவரது தந்தை ஜெயராஜ் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார் என்று முதல்-அமைச்சர் எதன் அடிப்படையில் சொன்னார்? தவறு அரசின் பக்கம் என்றுதானே அ.தி.மு.க. சார்பில் ரூ.25 லட்சம் கொடுத்தீர்கள்?
இயற்கையான மரணம் என்றால் கொடுத்திருப்பீர்களா? காவல்நிலையத்தை சாத்தான் வேட்டைக்காடாக மாற்றியவர்களை கொலை வழக்கில் கைது செய்யவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.