கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: பிரச்சாரத்தை ரத்து செய்தார் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ்

Spread the love

கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் பிரச்சாரத்தை ரத்து செய்வதாக அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.

 


வாஷிங்டன்,

அமெரிக்காவில் வருகிற நவம்பர் 3-ந் தேதி அங்கு ஜனாதிபதித் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் களம் இறக்கப்பட்டு உள்ளார்.

இந்தநிலையில் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,121 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை 25 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு 1,25,480 பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் நான்கில் ஒரு பங்கு அமெரிக்காவில் உள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் தான் அங்கு கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதாக விமர்சனம் எழுந்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து ஏற்கனவே திட்டமிடப்பட்ட தேர்தல் பிரசாரத்தை துணை அதிபர் மைக் பென்ஸ் ரத்து செய்துள்ளார்.

தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்தாலும், புளோரிடா, டெக்சாஸ் மற்றும் அரிசோனா மாகாணங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து கள விவரங்களை அறியவுள்ளதாக வெள்ளை மாளிகையில் நடந்த கூட்டத்தில் துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்த, கிரேட் அமெரிக்கன் கம்பேக் டூர்’ என்ற நிகழ்ச்சியும் ஒத்திவைக்கப்பட்டது. மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நேரம் என்பதால் நிகழ்ச்சியை ஒத்திவைத்ததாகவும், விரைவில் நிகழ்ச்சி நடைபெறும் தேதி குறித்து அறிவிப்போம் என டிரம்பின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page