கொரோனா வைரஸ் இன்னும் இங்கிலாந்தில் அழியவில்லை – பிரதமர் போரிஸ் ஜான்சன்

Spread the love

கொரோனா வைரஸ் இன்னும் இங்கிலாந்தில் அழியவில்லை என்பதை மக்கள் உணர வேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

லண்டன்

உலகை தொடர் அச்சத்தில் வைத்திருக்கும் கொரோனாவால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இங்கிலாந்திலும் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், அங்குள்ள மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கடற்கரைகளிலும், தெருவோர கேளிக்கைகளிலும் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.

தெற்கு இங்கிலாந்தில் உள்ள போர்ன்மவுத் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடற்கரைகளில் நேற்று குவிந்த ஆயிரக்கணக்கான மக்களே இதற்கு சான்றாக அமைந்துள்ளது.இந்நிலையில் வரும் 4-ஆம் தேதி முதல் இங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட உள்ளன. இதனால் விதிமுறைகள் பறக்கவிடப்பட்டு கொரோனா பரவல் மேலும் தீவிரமாகும் என அரசு அச்சம் அடைந்துள்ளது.

ஏற்கனவே ஊரடங்கு தளர்வு கூடாது என்று உலக சுகாதார அமைப்பு மற்றும் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.இ

தையடுத்து லண்டனில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் போரிஸ் ஜான்சன், ஜூலை 4-ல்தான் தளர்வுகள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

விதிமுறைகளை பின்பற்றி கொரோனாவை வெல்ல வேண்டும். கொரோனா என்னைத் தாக்காது என்று இளைஞர்கள் சிலர் நினைக்கலாம்.அது உண்மையாக கூட இருக்கலாம். ஆனால் உங்கள் மூலம் முதியவர்களை தாக்கலாம். கொரோனா இன்னும் வெளியில்தான் காத்துக் கொண்டிருக்கிறது என்பதை மக்கள் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் போரிஸ் ஜான்சன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page