மராட்டியத்தில் மேலும் 77 போலீசாருக்கு கொரோனா தொற்று

Spread the love

மராட்டியத்தில் மேலும் 77 போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மும்பை,

ஆட்கொல்லி கொரோனா வைரஸ் மராட்டியத்தை புரட்டி போட்டு உள்ளது. இங்கு நோய் பாதிப்பு அசுர வேகத்தில் பரவி வருகிறது.

மராட்டியத்தில் கொரோனா ஊரடங்கு பாதுகாப்பு பணியில் இருந்துவரும் போலீசார்களும் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 77 போலீசார் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,743 ஆக உயர்ந்துள்ளது.

இந்த ஆட்கொல்லி நோய்க்கு உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 1,030 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page