ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,41,156 ஆக உயர்வு

Spread the love

ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 6,41,156 ஆக உயர்ந்துள்ளது.


மாஸ்கோ,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 1,02,84,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 5,05,211 பேர் உயிரிழந்துள்ளனர். உலகை அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ் ரஷ்ய நாட்டில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.

இந்நிலையில் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,719 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 6,41,156 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 93 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 9,166 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 4,03,430 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா மூன்றாவது இடத்தில் உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும் (26,37,439 பேர்), இரண்டாம் இடத்தில் பிரேசிலும் (13,45,470 பேர்) உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page