கொரோனாவுக்கு தடுப்பு மருந்து- இந்திய நிறுவனத்தின் மருந்தை மனிதர்களிடம் பரிசோதிக்க ஒப்புதல்

Spread the love

கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் முதல் தடுப்பு மருந்தை மனிதர்களிடம் பரிசோதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

உலக நாடுகளை விழிபிதுங்க வைத்துக்கொண்டு இருக்கும் கொரோனா வைரஸுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், இந்தியாவின் பயோடெக் நிறுவனமும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தில் ஆரம்பக் கட்ட வெற்றியைப் பெற்றுள்ளது.

ஐதாராபத்தைச் சேர்ந்த பயோடெக் நிறுவனம் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கொரோனாவுக்கு எதிராக இந்தியா கண்டுபிடித்துள்ள முதல் தடுப்பு மருந்தான COVAXINE விலங்குகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் வெற்றி பெற்றதால் மனிதர்களிடம் கண்டுபிடிக்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி கொடுத்துள்ளது. ஜூலை மாதத்தில் இந்த மருந்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனை நாடு முழுவதும் நடைபெறும் எனத்தெரிகிறது.

ஐசிஎம் ஆர் மற்றும் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து பயோடெக் என்ற நிறுவனம் கோவக்சைன் மருந்தை கண்டறிந்துள்ளது. மனிதர்களிடம் நடத்தப்படும் சோதனையிலும் வெற்றி பெறும் பட்சத்தில் கொரோனாவுக்கு எதிரான போரில் முக்கிய கட்டத்திற்கு உலகம் நகரும் என எதிர்பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page