தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் மாற்றம்

Spread the love

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜெயக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் மாற்றம் செய்யப்பட்டு புதிய கண்காணிப்பாளராக ஜெயக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு இருக்கும் ஜெயக்குமார் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஆக இருந்தவர். அதேபோல், தென்மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, தென்மண்டல ஐ.ஜி. ஆக முருகன் ஐ.பி.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page