பாதுகாப்பான நாடுகள் பயணப்பட்டியலில் இருந்து அமெரிக்கா நீக்கம்- ஐரோப்பிய ஒன்றியம்

Spread the love

கொரோனா பாதிப்பு காரணமாக பாதுகாப்பான நாடுகள் பயணப்பட்டியலில் இருந்து அமெரிக்காவை நீக்கி உள்ளது ஐரோப்பிய ஒன்றியம்

A

பிரசல்ஸ்

ஐரோப்பிய ஒன்றியத்தில் வெளிப்புற எல்லைகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. 27 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய ஆணையம், அதன் எல்லைகளுக்கு அப்பால் 14 நாடுகளில் இருந்து சுற்றுலா மற்றும் வணிக பயணங்கள் மேற்கொள்ள ஒப்புதல் அளித்தது.

அல்ஜீரியா, ஆஸ்திரேலியா, கனடா, ஜார்ஜியா, ஜப்பான், மாண்டினீக்ரோ, மொராக்கோ, நியூசிலாந்து, ருவாண்டா, செர்பியா, தென் கொரியா, தாய்லாந்து, துனிசியா மற்றும் உருகுவே ஆகிய நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்தது.

குறிப்பாக தெற்கு ஐரோப்பாவின் நாடுகள் கொரோனா தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த நடவடிக்கை ஐரோப்பிய ஒன்றிய பயணத் தொழில் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தை விட அமெரிக்கா, ரஷ்யா, பிரேசில் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.எனவே குறிப்பிட்ட நாடுகள் அனுமதி ஒப்புதலுக்காக குறைந்தது இரண்டு வாரங்கள் காத்திருக்க வேண்டும் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page