என்.எல்.சி. பாய்லர் வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

Spread the love

என்.எல்.சி. பாய்லர் வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

 

என்.எல்.சி. பாய்லர் வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. நெய்வேலி, கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி.யின் 2-ம் அனல் மின்நிலையத்தில் 7 அலகுகள் மூலம் 1,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதில் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் இன்று பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் பலியாகினர். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் என்.எல்.சி. விபத்தில் படுகாயமடைந்த நிரந்தர தொழிலாளி சிவக்குமார் தற்போது உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இருவரை தேடும் பணி நடந்து வருவதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே என்.எல்.சி நிர்வாகத்தை கண்டித்து உயிர் இழந்தவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், தொழிற்சங்கத்தினர் அனல் மின் நிலையம் முன்பு உரிய நிவாரணம் கேட்டு முற்றுகையிட்டனர். பின்னர் என்.எல்.சி. தலைவர் ராகேஷ்குமாருடன் தொழிற்சங்கத்தினர், அரசியல் பிரமுகர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சூழலில் பாய்லரை முறையாக பராமரிக்காத காரணத்தால் என்.எல்.சி. பொதுமேலாளர் கோதண்டம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page