சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை என சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர் கூறினார்.

சென்னை
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் பெண் காவலர் ரேவதியை தொடர்ந்து முத்துராஜ் அப்ரூவராக மாற உள்ளார் என கூறபட்டது. ஆனால் இந்த நிலையில் முத்துராஜ் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டு உள்ளார்
சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர், தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறி இருப்பதாவது:-
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட யாரும் அப்ரூவராக மாறவில்லை.ஏற்கனவே 4 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம்.காவலர் முத்துராஜ் கைது செய்யப்பட்டார் என வெளியான தகவல் உண்மையில்லை. சாத்தான்குளம் சம்பவத்தில் நடுநிலையான விசாரணை நடைபெறும்.
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் அனைவரிடமும் விசாரணை நடத்தப்படும் சாத்தான்குளம் வழக்கில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை என கூறினார்.