சீன நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

Spread the love

சீன நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வாஷிங்டன்

ஹாங்காங்கில் போராட்டத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்து சிறையில் அடைக்க வகை செய்யும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைச் சீனா நடைமுறைப்படுத்தியுள்ளது. இது ஹாங்காங்கின் தன்னாட்சியைப் பறிக்கும் செயலாகும் எனக் கூறி அமெரிக்காவும் பிரிட்டனும் கண்டனம் தெரிவித்துள்ளன.

உலக நாடுகள் பலவும் கண்டிக்கும் நிலையில் சீனாவின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து அதன் மீது தடைகள் விதிப்பதற்கு அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபை ஒரு மனதாக ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில் ஹாங்காங்கில் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியதற்குப் பதிலடியாகச் சீன நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஏற்கெனவே அமெரிக்காவுடன் வணிகம் செய்வதில் ஹாங்காங்குக்கு வழங்கப்பட்ட சிறப்புத் தகுதியும் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page