இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டது; ஒரே நாளில் 21 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி

Spread the love

இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரே நாளில் 21 ஆயிரம் பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி இருக்கிறது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால் தினந்தோறும் இந்த நோய்த்தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த வகையில் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் நேற்று கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

ஒரே நாளில் 20 ஆயிரத்து 903 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 25 ஆயிரத்து 544 ஆக உயர்ந்துள்ளது. இதில் 60.73 சதவீதம் பேர் அதாவது, 3 லட்சத்து 79 ஆயிரத்து 892 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில், 2 லட்சத்து 27 ஆயிரத்து 439 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் மராட்டிய மாநிலத்தில் 125 பேரும், டெல்லியில் 61 பேரும், தமிழகத்தில் 57 பேரும், குஜராத் மற்றும் கர்நாடகாவில் 19 பேரும், உத்தரபிரதேசத்தில் 17 பேரும், மேற்குவங்காளத்தில் 16 பேரும், அரியானாவில் 11 பேரும், ஜம்மு காஷ்மீரில் 10 பேரும், ராஜஸ்தானில் 9 பேரும், தெலுங்கானா மற்றும் மத்தியபிரதேசத்தில் தலா 8 பேரும், பீகாரில் 7 பேரும், ஆந்திராவில் 5 பேரும், பஞ்சாபில் 3 பேரும், புதுச்சேரியில் 2 பேரும், கேரளா மற்றும் உத்தரகாண்டில் தலா ஒருவரும் என ஒரே நாளில் 379 பேரின் உயிரையும் கொரோனா பறித்துள்ளது. இதனால் நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 18 ஆயிரத்து 213 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் 3 மாநிலங்களாக மராட்டியம், தமிழகம் மற்றும் டெல்லி இருந்து வருகிறது. இதில் மராட்டிய மாநிலத்தில் மட்டும் 1 லட்சத்து 86 ஆயிரத்து 626 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி இருக்கிறது. தமிழகத்தில் புதிதாக நோய்த்தொற்று உறுதியானவர்களுடன் சேர்த்து கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியுள்ளது. தேசிய தலைநகரான டெல்லியில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 92 ஆயிரத்து 175 ஆக உள்ளது. இதில் டெல்லியில் 8,178 பேரும், டெல்லியில் 2,864 பேரும், தமிழகத்தில் 1,385 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகாவில் 18,570 பேரும், ஆந்திராவில் 16,097 பேரும், கேரளாவில் 4,753 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். புதுச்சேரியில் இந்த எண்ணிக்கை 802 ஆக உயர்ந்துள்ளது.

மேற்கண்ட தகவல்கள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவர பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page