காமராஜர் அவர்களின் சிலையை 1-7-2020 அன்று இரவு சேதப்படுத்திய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பள்ளிவிளை சந்திப்பில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் சிலையை 1-7-2020 அன்று இரவு சேதப்படுத்திய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து விட்டு நாடார் அமைப்புகள் சார்பில் நாடார் மஹாஜன சங்கம் துனை தலைவர் சுரேந்திரகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் பெருந்தலைவரின் சிலையை சேதப்படுத்தப்படுத்தியவர்களை கண்டறிந்து கைது செய்து கடுமையான தண்டனை வழங்கிடவும், அரசு எங்களுக்கு அனுமதி அளித்தால் நாங்கள் சேதப்படுத்தப்பட்ட சிலைக்கு பதிலாக அதே இடத்தில் பெருந்தலைவரின் முழு உருவ சிலை வைப்பதற்கு தயராக உள்ளோம் என்று கூறினார். பேட்டியின் போது பாலசிவகனேசன் நாடார் , தமிழ்நாடு சான்றோர் நாடார் சங்கம் நிறுவன தலைவர் ரெஜிசிங் நாடார் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.