இந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வாஷிங்டன்,
அமெரிக்காவின் 244-வது சுதந்திர தினம் நேற்று (சனிக்கிழமை) கொண்டாடப்பட்டது. அமெரிக்க சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அமெரிக்க மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து இந்திய பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.
பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “ 244- சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்க மக்களுக்கும் அதிபர் டிரம்பிற்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டு இருந்தார். பிரதமர் மோடியின் டுவிட்டிற்கு பதிலளித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், “நன்றி நண்பரே, இந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.