நாகர்கோவிலில் பள்ளிவிளை சந்திப்பில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் புதிய திரு உருவ சிலை அமைக்க நாடார் அமைப்புகள் முடிவு

நாகர்கோவிலில் பள்ளிவிளை சந்திப்பில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் உருவ சிலை சேதப்படுத்ததை முன்னிட்டு சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசை நாடார் அமைப்புகள் வலியுறுத்தி வரும் நிலையில் இன்று சேதப்படுத்தப்பட்ட சிலையை மாற்றி அதே இடத்தில் சிலை அமைப்பது குறித்து அந்த இடத்தை பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார்.அதில் முழு உருவ வெண்கல சிலையை நாடார் மஹாஜன சங்கம், குமரி மாவட்ட இந்து நாடார் சங்கம், தமிழ்நாடு சான்றோர் நாடார் சங்கம், சத்திரிய நாடார் இயக்கம் மற்றும் நாடார் அமைப்புகள் இனைத்து அமைப்பதாக முடிவு செய்யப்பட்டது