ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து நேற்று முன்தினம் ராக்கெட் ஒன்று வீசப்பட்டது.

பாக்தாத்,
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து நேற்று முன்தினம் ராக்கெட் ஒன்று வீசப்பட்டது. எனினும் அமெரிக்க வான் பாதுகாப்பு படை அந்த ராக்கெட்டை நடு வழியிலேயே இடைமறித்து தாக்கி அழித்தது.
இந்தத் தாக்குதல் நடந்த சில மணி நேரங்களில் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் ராக்கெட் ஒன்றை வீசினர். இந்த ராக் கெட் விமான நிலையத்துக்கு மிக அருகில் விழுந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த ராக்கெட் வெடிக்கவில்லை. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
அடுத்தடுத்து நடத்தப்பட்ட இந்த ராக்கெட் தாக்குதலுக்கு அமெரிக்காவும், ஈராக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.