பெண் அதிகாரி நியமனம் குறித்து விரிவான நியமனம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,
கேரளஅரசின் தகவல் தொழில் நுட்ப துறையின் உயர் பதவிக்கு ஸ்வப்னா சுரேஷ் நியமிக்கப்பட்டது எப்படி என காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சியினர் கேள்வி எழுப்பி உள்ளனர். இதில் முதல்-மந்திரி அலுவலகத்துக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டி வருகிறார்கள்.
அதை முதல்-மந்திரி பினராயி விஜயன் மறுத்துள்ளார். அவர் கூறியதாவது:-
பெண் அதிகாரிக்கு அரசு உயர் பதவி வழங்கப்பட்ட விவகாரம் என் கவனத்திற்கு வரவில்லை. மேலும் இப்பிரச்சினையில் முதல்-மந்திரி அலுவலகத்துக்கு எந்த தொடர்பும் இல்லை. அவர் நியமனம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும்.
இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.
இதற்கிடையே ஸ்வப்னா சுரேஷ் ரூ.100 கோடி அளவுக்கு தங்க கடத்தலில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.