கொரோனா பாதிப்பு; குணமடைந்தோர் விகிதம் 61.53% ஆக உயர்வு: சுகாதார அமைச்சகம் அறிவிப்பு

Spread the love

நாட்டில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 61.53% ஆக உயர்வடைந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.


புதுடெல்லி,

நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7.42 லட்சம் ஆகவும், பலி எண்ணிக்கை 20,642 ஆகவும் உயர்ந்து இருக்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் 22 ஆயிரத்து 752 பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். 482 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் டெல்லி, குஜராத் மற்றும் உத்தர பிரதேசம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் குணமடைந்தோர் விகிதம் ஆனது, தேசிய சராசரி குணமடைந்தோர் விகிதத்திற்கும் கூடுதலாக உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த 2 நாட்களுக்கு முன் தெரிவித்து இருந்தது. இவற்றில் சண்டிகர் (85.9), லடாக் (82.2), உத்தரகாண்ட் (80.9), சத்தீஷ்கார் (80.6), ராஜஸ்தான் (80.1) ஆகிய மாநிலங்களில் இந்த விகிதம் 80 சதவீதத்திற்கும் மேல் உள்ளது என்றும் தெரிவித்து இருந்தது.

நாடு முழுவதுமுள்ள 1,115 பரிசோதனை மையங்களில் தொடர்ச்சியாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்ததில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு பரிசோதனை எண்ணிக்கை 1 கோடியை கடந்துள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.

நாட்டில் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு குணமடைந்தவர்களின் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது நேற்று 61.13% ஆக உயர்வடைந்து இருந்தது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 16 ஆயிரத்து 883 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 56 ஆயிரத்து 830 ஆக உயர்ந்து உள்ளது. இதனை தொடர்ந்து இதன் விகிதம் 61.53% ஆக உயர்வடைந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page