பிளஸ் 2 இறுதித்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27 ஆம் தேதி தேர்வு – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

Spread the love

பிளஸ் 2 இறுதித்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27 ஆம் தேதி தேர்வு நடத்த அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


சென்னை,

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டன. தேர்வுகள் அனைத்து தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டன.

தற்போது ஊரடங்கு மெல்ல தளர்த்தப்பட்டு வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் பள்ளித் தேர்வுகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி நடைபெற இருந்த 12 ஆம் வகுப்பு தேர்வை நடத்தி முடிக்க முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு தற்போது தெரிவித்துள்ளது.

இது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அறிவிப்பில், மார்ச் 24 ஆம் தேதி தேர்வு எழுத முடியாத பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 27 ஆம் தேதி தேர்வு நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

மாணவர்கள் படித்த அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். இருப்பினும் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படாது என்று தெரிவித்த அவர் தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் செல்ல போக்குவரத்து வசதி செய்து தரப்படும் என்று கூறினார்.

தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகளை வரும் 13 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை அவரவர் பள்ளிகளில் மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page