பிரேசிலில் புதிதாக 45 ஆயிரம் பேருக்கு கொரோனா

Spread the love

ரேசிலில் புதிதாக 45 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.


ரியோ டி ஜெனீரோ,

கொரோனா பாதிப்பில் உலக அளவில் பிரேசில் 2-வது இடத்தில் உள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 45 ஆயிரத்து 305 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இது முந்தைய நாளை விட 2 மடங்கு அதிகம் ஆகும். அதாவது நேற்று முன்தினம் அங்கு 20 ஆயிரத்து 229 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியானது. நேற்றைய பாதிப்பு எண்ணிக்கையுடன் சேர்த்து பிரேசிலில் மொத்தம் 16 லட்சத்து 68 ஆயிரத்து 159 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 254 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இறப்பு விகிதமும் முந்தைய நாளை விட 2 மடங்காக உயர்ந்து உள்ளது. இதுவரை 10 லட்சத்து 94 ஆயிரத்து 457 பேர் குணமாகி வீடு திரும்பி விட்டதாக ஜான்ஸ் ஹாப்கின் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page