சீனாவில் சினிமா தியேட்டர்கள் மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பீஜிங்,
கொரோனா வைரஸ் முதன்முதலில் தோன்றிய சீனாவில், தற்போது அதன் தாக்கம் குறைந்து வருகிறது. இதையடுத்து, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த சினிமா தியேட்டர்களை மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று அபாயம் குறைவாக உள்ள பகுதிகளில், வருகிற 20-ந் தேதி முதல் தியேட்டர்களை திறக்கலாம் என்று சீன திரைப்பட நிர்வாகம் கூறியுள்ளது.
தியேட்டர் வளாகங்களில் உரிய தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை சம்பந்தப்பட்ட பகுதி, அதிக ஆபத்து கொண்ட பகுதியாக மாற்றமடைந்தால், தியேட்டரை மீண்டும் மூட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.