ராஜஸ்தானில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.
லக்னோ,
ராஜஸ்தானில் முதல் மந்திரி அசோக் கெலாட்டிற்கும் துணை முதல் மந்திரியாக இருந்த சச்சின் பைலட்டிற்கும் இடையே கருத்து வேறுபாட்டால் அம்மாநில அரசியலில் உச்ச கட்ட பரபரப்பு நிலவுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் நிலவி வரும் தொடர் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதி, ராஜஸ்தானில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் பரிந்துரைக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் பகுஜன் சமாஜ் கட்சிச் எம்.எல்.ஏக்களை காங்கிரஸில் சேர்த்ததன் மூலம் இரண்டாவது முறையாக எங்களை ஏமாற்றியுள்ளார். சட்டவிரோத மற்றும் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்ட ஒரு காரியத்தைச் அசோக் கெலாட் செய்தார் என்பதும் தெளிவாகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் நிலவும் அரசியல் உறுதியற்ற தன்மையை கணக்கில் கொண்டு, மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பரிந்துரைக்க வேண்டும். இதன் மூலமாக ஜனநாயகத்தை காக்க முடியும்” என்று பதிவிட்டுள்ளார்.