கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளவர்களுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் தவிர்க்கப்பட வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து நல்ல பலன் அளிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அடிக்கடி கூறி வருகிறார். கடுமையான பக்க விளைவுகள் ஏற்படுத்தும் மருந்து இது என்பதால், இந்த மருந்தை அனைவரும் பயன்படுத்தக் கூடாது என்பதும் மருத்துவ நிபுணர்கள் ஒருசாரர் கருத்தாக உள்ளாது.
இந்த நிலையில், தீவிர கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் தவிர்க்கப்பட வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மிதமான, நடுத்தர பாதிப்புடைய கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமே ஹைட்ராக்சி குளோரோகுயின் பயன்படுத்த வேண்டும் மருத்துவ பரிந்துரையின்றி ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை எடுத்துக்கொள்ளக் கூடாது எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.