4 நாட்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உலக அளவில் பாதிக்கபட்டு உள்ளனர். அமெரிக்காவில் 4நாட்களில் 3 லட்சம் பாதிப்புகள்

வாஷிங்டன்
உலகளாவிய கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள் வெள்ளிக்கிழமை 1.4 கோடிய கடந்துவிட்டது எனவும், முதன் முறையாக கடந்த 100 மணி நேரத்திற்குள் 10 லட்சம் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாகவும் ராய்டர்ஸ் செய்து நிறுவனம் தெரிவித்துள்ளது
முதல் வழக்கு கடந்த ஆண்டு டிசம்பர் கடைசியில் சீனாவில் பதிவாகியது, மேலும் 10 லட்சம் பாதிப்புகளை எட்ட மூன்று மாதங்கள் ஆனது. ஜூலை 13 அன்று பதிவு செய்யப்பட்ட 1.3 கோடியில் ல் இருந்து 1.4 கோடி வழக்குகள் ஏற நான்கு நாட்கள் மட்டுமே ஆகி உள்ளது.
அரசாங்க அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட ராய்ட்டர்ஸ் தகவல்படி கொரோனா நோய் அமெரிக்காவில் மிக வேகமாக பரவி வருவதை காட்டுகிறது, இது உலகின் பாதிக்கும் மேற்பட்ட நோய்த்தொற்றுகளுக்கும் அதன் பாதி இறப்புகளுக்கும் காரணமாக உள்ளது.அமெரிக்காவில் 4 நாட்களில் பாதிப்புகள் 3 லட்சத்தை நெருங்கி உள்ளது.