கொரோனா பாதிப்பால் முகக்கவசம் அணிவது அமெரிக்காவில் அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன்
நாட்டின் உயர் தொற்று நோய் நிபுணர் டாக்டர் அந்தோனி ஃபாசி, மாநில மற்றும் உள்ளூர் தலைவர்களை முகக்கவசம் அணிவதில் “முடிந்தவரை கண்டிப்புடன் இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்,
முகக்கவசம் அணிவது அமெரிக்காவில் மிகவும் அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது.
பெரும்பான்மையான மாநில ஆளுநர்கள் இப்போது வெளியில் முகக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். அவர்களில் குடியரசுக் கட்சி ஆளுநர்களும் உள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற தேசிய ஆணையை நிராகரித்தார்.அமெரிக்கா முழுவதும் புதிய கொரோனா வைரஸ் வியக்க வைக்கும் வகையில் அதிகரித்த போதிலும் டிரம்ப் இவ்வாறு கூறியது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து டொனால்டு டிரம்ப் கூறியதாவது:
மக்களுக்கு ஒரு குறிப்பிட்ட சுதந்திரம் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.எல்லோரும் முகக்கவசம் அணிந்தால் அனைத்தும் உடனே மறைந்துவிடும் என்ற கூற்றுடன் நான் உடன்படவில்லை.
எல்லோரும் முகக்கவசம் அணிய வேண்டாம் என்று கூறிக்கொண்டிருந்தார்கள், திடீரென்று எல்லோரும் முகக்கவசம் அணிய வேண்டும் என கூறப்பட்டது, உங்களுக்குத் தெரிந்தபடி, முகக்கவசங்கள் கூட பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன.அவ்வாறு கூறப்படுவதால், நான் முகக்கவசங்களை நம்புகிறேன், அவை நல்லது என்று நினைக்கிறேன் என டிரம்ப் கூறினார்.