கொரோனா தடுப்பூசி: சோதனை முயற்சியாக மனிதர்களிடம் நாளை மேற்கொள்கிறது – எய்ம்ஸ்

Spread the love

இந்தியாவில் மனிதர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சோதனை முயற்சியை எய்ம்ஸ் நாளை முதல் தொடங்க உள்ளது.


புதுடெல்லி,

உலகம் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் கடந்த சில மாதங்களாகவே குறையாத நிலையில், தற்பொழுது இதற்கான தீர்வாக பல மருத்துவமனை ஆய்வுக்கூடங்களில் மருந்துகள், தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு சோதனையும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய வைரலாஜி நிறுவனம் (என்ஐவி) ஆகியவற்றுடன் இணைந்து கொரோனா வைரஸை முறியடிக்கும், கோவாக்ஸின் என்ற பெயரிலான தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது.

கொரோனாவுக்கு எதிராக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் தடுப்பு மருந்து என்று இதற்கு பெயர் கிடைத்துள்ளது. இந்த கோவேக்சினை சோதனை முயற்சியாக மனிதர்களிடம் நடத்த எய்ம்ஸ் நெறிமுறைக்குழு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

இதையடுத்து நாளை முதல் முதல் கட்டமாக கோவேக்சினை சோதனை முயற்சியாக மனிதர்களுக்கு செலுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

மனிதர்களுக்கு கோவேக்சினை சோதனை முயற்சியாக செலுத்த தன்னார்வளர்கள் பங்கு பெறலாம். 18 முதல் 55 வயது நிரம்பிய தன்னார்வளர்கள் தடுப்பூசி பரிசோதனையில் ஈடுபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பரிசோதனை மேற்கொள்ள உள்ள நபர்களுக்கு எந்த வித நோயும் இல்லாமல் பூரண உடல் நடத்துடன் இருக்க வேண்டும். இதற்கான பதிவு நடைமுறை திங்கள்கிழமை முதல் 20-ம் தேதி முதல் நடைபெறும் என எய்ம்ஸ் மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர் டாக்டர் சஞ்ஜெய் ராய் தெரித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், சோதனையில் பங்கேற்க விரும்பும் எந்தவொரு ஆரோக்கியமான நபரும் Ctaiims.covid19@gmail.com என்ற மின்னஞ்சலில் தங்கள் விவரம் குறித்து அனுப்பலாம் அல்லது எஸ்எம்எஸ் மூலமாகவும் அனுப்பலாம் அல்லது 7428847499 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page