டெல்லியில் கனமழை காரணமாக மழை வடிநீர் கால்வாய் அருகே இருந்த வீடுகள் இடிந்து கால்வாய்க்குள் விழுந்தது.

புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. ராஜ்பாத், இந்தியா கேட், தீன் மூர்த்தி மார்க், மின்டோ சாலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு நடுவே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தங்கள் அன்றாட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அண்ணாநகர் பகுதியில் கால்வாய் ஓரமிருந்த வீடுகள், கனமழை காரணமாக இடிந்து விழுந்தது. கால்வாய் பகுதிக்குள் வீடு இடிந்து விழுந்ததை பார்த்த மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர். இந்த விபத்தால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என முதல் கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது.