செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பி சாதனை புரிந்த ஐக்கிய அரபு அமீரக திட்டத்தை ஒரு பெண் தலைமை தாங்கி வழிநடத்தி உள்ளார்.

துபாய்
அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா ஆகியநாடுகள் மட்டுமே விண்வெளிக்கு விண்கலங்களை ஆய்வுக்கு அனுப்பி சாத்னை புரிந்து உள்ளன. முதன் முறையாக ஐக்கிய அரபு அமீரகம் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்பி சாதனை புரிந்து உள்ளது.
கடந்த வாரமே இந்த விண்கலம் ஏவப்பட திட்டமிடப்பட்டிருந்தது ஆனால் மோசமான வானிலையால் விண்ணில் செலுத்தப்படவில்லை.
ஜப்பானில் உள்ள தனேகஷிமா என்னும் இடத்திலிருந்து ஏவப்பட்ட இந்த விண்கலம் எச்-2 ஏ ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இது செவ்வாய் கிரகத்தின் காலநிலை மற்றும் பருவநிலைகளை ஆராயும்.
அமெரிக்க நிபுணர்களிடம் பயிற்சி பெற்ற அமீரகத்தின் பொறியாளர்கள் இந்த விண்கலத்தை ஆறுமாதத்தில் உருவாக்கி உள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இந்த கனவு திட்டத்திற்கு தலைமை தாங்கியவர் ஒரு பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
ராக்கெட் வெற்றிகரமாக வானத்தில் பறப்பதை பார்த்தபோது அவரது உற்சாகத்தையும் நிம்மதியையும் பற்றி அமீரக திட்டமான ஹோப்பின் அறிவியல் தலைவரான சாரா அல் அமிரி கூறும் போது
51 ஆண்டுகளுக்கு முன்பு அப்பல்லோ 11 சந்திரன் தரையிறங்குவதை அமெரிக்க மக்கள் பார்த்தபோது ஏற்பட்ட தாக்கம் ஜூலை 20 அன்று தனது நாட்டு மக்களுக்கும் ஏற்படும்
“இது ஒரு முழு தலைமுறையினருக்கும் ஒரு நங்கூரம், இதைப் பார்க்கும் அனைவரையும் மேலும் தூண்டுவதற்கும் பெரியதாக கனவு காண்பதற்கும் தூண்டும் என கூறி உள்ளார்.
அல்-அமிரி ஆரம்பத்தில் கணினி பொறியியலாளராக பணியைத் தொடங்கினாலும், பின்னர் அவர் எமிரேட்ஸ் இன்ஸ்டிடியூஷன் ஃபார் அட்வான்ஸ்ட் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியில் விண்வெளி தொழில்நுட்பத் துறையில் நுழைந்தார். அங்கு அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முதல் செயற்கைக்கோள்களில் பணிபுரிந்தார். அவரைப் பொறுத்தவரை, அது ஒரு கனவு நனவாக்கி உள்ளது.