ஆந்திராவில் கடந்த 24 மணிநேரத்தில் 4,944 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி

Spread the love

ஆந்திராவில் கடந்த 24 மணிநேரத்தில் 4,944 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐதராபாத்,

அந்திர மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 4,944 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆந்திராவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 58,668 ஆக அதிகரித்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 62 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை கொரோனா பாதிப்பால் பலியானவர்வர்களின் எண்ணிக்கை 758 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 32,336 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 25,574 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page