இந்தியாவில் கொரோனா பரவும் வேகம் காட்டுத் தீ போல அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில், அதில் இருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது.

புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா பரவும் வேகம் காட்டுத் தீ போல அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில், அதில் இருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. அதன்படி இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் 29 ஆயிரத்து 557 பேர் பூரண குணமடைந்து ஒரே நாளில் ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ ஆகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனால் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 82 ஆயிரத்து 607 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 4 லட்சத்து 26 ஆயிரத்து 167 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வகையில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கும், சிகிச்சை பெறுபவர்களுக்கும் இடையேயான வித்தியாசம் 3 லட்சத்து 56 ஆயிரத்து 440 ஆக உள்ளது.