கொழும்பு துறைமுகத்தில் உள்ள ஆழ்கடல் சரக்கு பெட்டக முனையத்தை மேம்படுத்த இந்தியாவுடன் முந்தைய இலங்கை அதிபர் சிறிசேனா ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்திட்டார்.

கொழும்பு,
கொழும்பு துறைமுகத்தில் உள்ள ஆழ்கடல் சரக்கு பெட்டக முனையத்தை மேம்படுத்த இந்தியாவுடன் முந்தைய இலங்கை அதிபர் சிறிசேனா ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தம் காலாவதி ஆன நிலையில், இந்தியாவுடன் தற்போதைய இலங்கை அரசு, முறையான ஒப்பந்தம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இதை எதிர்த்து கொழும்பு துறைமுக தொழிலாளர்கள், தங்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து ஒரு வார கால போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
சரக்கு பெட்டக முனையத்தை 100 சதவீதம் இலங்கை அரசே மேம்படுத்த வேண்டும் என்றும், எந்த வெளிநாட்டுக்கும் அப்பொறுப்பை அளிக்கக்கூடாது என்றும் தொழிற்சங்க தலைவர்கள் தெரிவித்தனர்.