உலகைச் சுற்றி…

* புகலிடம் கோருவோருக்கு அமெரிக்கா பாதுகாப்பான நாடாக இல்லை என்று கனடா மத்திய கோர்ட்டு ஒரு வழக்கின் தீர்ப்பில் கூறி உள்ளது. மேலும், அமெரிக்காவுடன் கனடா போட்டிருந்த பாதுகாப்பான மூன்றாம் நாடு ஒப்பந்தம் தவறானது எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
* ஆசியாவின் 4-வது பெரிய பொருளாதார நாடான தென்கொரியா, கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பெரும் பொருளாதார மந்த நிலையில் சிக்கி உள்ளது. 57 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்றுமதிகள் குறைந்துள்ளன.
* நைஜீரியாவில் கிராஸ் ரிவர் மாகாணத்தில் சீனாவை சேர்ந்த 4 கட்டிட தொழிலாளர்களை ஆயுதம் ஏந்திய நபர்கள் கடத்திச்சென்று விட்டனர். இதற்கு மத்தியில் வட கிழக்கு நைஜீரியாவில் கடந்த மாதம் கடத்தப்பட்ட தொண்டு நிறுவன ஊழியர்கள் 5 பேரை மத அடிப்படையிலான பயங்கரவாதிகள் கொன்று விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
* அமெரிக்காவில் விசா மோசடியில் சிக்கியுள்ள சீன ஆராய்ச்சியாளர் டாங் ஜூவான், சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள சீன தூதரகத்தில் ஒளித்து வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு வக்கீல்கள் குற்றம் சுமத்தி உள்ளனர்.
* 91 வயதான குவைத் அமீர், அறுவை சிகிச்சைக்கு பிந்தைய மருத்துவ பராமரிப்புக்காக நேற்று காலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.
* ஆஸ்திரேலியாவில் அரசு பத்திரங்களில், கால நிலை மாற்றம் தொடர்பான அபாயங்களை முதலீட்டாளர்களுக்கு தெளிவுபடுத்த தவறியதற்காக கட்டா ஓ டோனல் என்ற 23 வயது மாணவர், பெடரல் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார்.