பீகாரில் 14 மாவட்டங்களில் வெள்ளச் சேதம் அதிகம் – கடந்த சில நாட்களில் மட்டும் 13 பேர் பலி

Spread the love

பீகாரில் 14 மாவட்டங்களில் வெள்ளச் சேதம் அதிகமாக காணப்படுகிறது.

பாட்னா,

பீகார் மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த சில வாரங்களாக வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மாநிலத்தில் பாயும் பல ஆறுகளில் அபாய அளவுக்கும் மேலாக வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.

நேபாளத்தில் உற்பத்தியாகி பீகாரின் வடமாவட்டங்களை கடந்து செல்லும் நதிக​ளில் வெள்ளப் பெருக்கு அதிகமாக உள்ளது. 29 தேசிய, மாநில பேரிட​ர் அமைப்பை சேர்ந்த குழுவினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பீகாரில் இதுவரை, சுமார் நான்கு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page